
நண்டு தொக்கு
Nandu thokku masala is a tastiest sea food, high in protein.
Servings3 people
Prep Time10 minutes
Cook Time25 minutes
Ingredients
- 5-6 நண்டு(பெரியது)
- 1 வெங்காயம்
- 2 தக்காளி
- 1/2தேக்கரண்டி மிளகாய் தூள்
- 1/2தேக்கரண்டி மல்லித் தூள்
- உப்புதேவையான அளவு
- 1 சிட்டிகை மஞ்சள் தூள்
தாளிப்பதற்கு
- 1கப் நல்லெண்ணெய்
- 1/2தேக்கரண்டி கடுகு
- 1/2தேக்கரண்டி சோம்பு
- கறிவேப்பிலைசிறிது
Instructions
-
முதலில் நண்டை நன்கு சுத்தம் செய்து நீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
-
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சிறிது ஊற்றி காய்ந்ததும், அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வதக்கி இறக்கி, குளிர வைத்து மிக்ஸியில் போட்டு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
-
பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
-
பிறகு அதில் தக்காளி மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
-
பின் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பு சேர்த்து, அத்துடன் நண்டையும் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.
-
நண்டில் இருந்து நீர் வெளியேறி சுண்டிய பின், சிறிது தண்ணீர் தெளித்து, நண்டு சிவப்பாக மாறும் வரை வேக வைத்து இறக்கினால், நண்டு தொக்கு மசாலா ரெடி!!!
The post Nandu Thokku Recipe In Tamil appeared first on HungryForever Food Blog.
from HungryForever Food Blog https://ift.tt/2xPZU5K
via gqrds
Comentarios
Publicar un comentario